tamilnadu

img

அத்வானி, ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்... பாபர் மசூதி இடிப்பு வழக்கு

லக்னோ:
பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி உள்ளிட்டோர் தொடர்புடைய பாபர் மசூதி இடிப்பு வழக்கை,உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம்மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது.ஆகஸ்ட் 31-க்குள் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலையில், நீதிபதி எஸ்.கே.யாதவ், சிஆர்பிசி (CrPC) 313-ஆவது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை, ஜூன் 4 முதல் பதிவுசெய்து வருகிறார்.ஏற்கெனவே உமாபாரதி, இவ்வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து, ஜூலை 23அன்று முரளிமனோகர் ஜோஷியும், ஜூலை 24 அன்று எல்.கே. அத்வானியும்வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகிவாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

இதேபோல, சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. சதீஷ் பிரதான், ஜூலை22 அன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, சிபிஐ, 49 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அவர்களில் 32 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். மீதமுள்ளவர்கள் இறந்து விட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

;